#BycottQatarAirways என்று பாஜகவினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்ரெண்ட் குறித்து விமர்சித்துள்ள கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர், “தங்கள் வாழ்நாளில் இதுவரை ஒருமுறைகூட விமான டிக்கெட் வாங்காதவர்கள் #BycottQatarAirways என ட்விட்டரில் எழுதுகிறார்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
நபிகள் நாயகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சர்ச்சைக்கு இதுவரை மொத்தம் 15 இஸ்லாமிய நாடுகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.
நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #BoycottIndia என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதனால் கத்தாரில் உள்ள கடைகளில் இந்தியப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி #BycottQatarAirways என்ற ஹேஷ்டேக்கை பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இஸ்லாத்தை மதவெறியர்கள் அவமதிக்க இந்திய அரசு அனுமதிக்க கூடாது: தாலிபான்கள் கோரிக்கை
லட்சக்கணக்கானோரால் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ள இந்த ஹேஷ்டேக், Boycott என்பதற்கு பதில் Bycott என எழுத்துப் பிழையுடன் உருவாக்கப்பட்டது. இது கேலிக்குள்ளான நிலையில் பின்னர் எழுத்துப்பிழை திருத்தம் செய்யப்பட்டது.
இந்த ட்ரெண்ட் குறித்து விமர்சித்துள்ள கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேக்கர், “தங்கள் வாழ்நாளில் இதுவரை ஒருமுறைகூட விமான டிக்கெட் வாங்காதவர்கள் #BycottQatarAirways என ட்விட்டரில் எழுதுகிறார்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Source : NDTV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.