முகமது நபியை விமர்சித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கருத்துக்கள் வன்முறையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூகப் பிளவுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து மதங்கள், சாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விசயத்தைப் பொருட்படுத்தாமல் அமைதிக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பாஜகவில் உள்ள சில தலைவர்களின் மோசமான பேச்சை நான் கண்டிக்கிறேன். இந்தப் பேச்சுகளின் விளைவாக வன்முறை பரவுவது மட்டுமல்லாமல், நாட்டின் கட்டமைப்பு பிளவுபடுகிறது. சமூகத்தில் நிலவும் அமைதி மற்றும் நல்லுறவுக்கு இடையூறு விளைவிக்கும்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்கவும் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜஹாங்கீர்புரி: காவல் துறைக்கு பயந்து ஊரிலிருந்து வெளியேறும் இஸ்லாமிய இளைஞர்கள்
தேசத்தின் நலனுக்காக மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். “அதே நேரத்தில், சாமானிய மக்களின் நலனுக்காக அமைதியைப் பேணுமாறு அனைத்து சாதி, சமயம், மதம் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாபானர்ஜி கூறியுள்ளார்.
முன்னதாக, முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.
’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து
மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Source: Thenewindianexpress
அடாவடித்தனம் செய்யும் தீட்சிதர்கள் Vanchinathan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.