Aran Sei

போராடுவதற்கு தடை விதித்த பாஜக அரசு: ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள விவசாயிகள்

த்தர பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதியளிக்க மறுத்த நிலையிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியிருப்பதாக என்டிடிவி  செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதிய கிசான் சங்கம், ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை உத்தர பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் மகாபஞ்சாயத்து எனும் போராட்ட நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தனர்.

மதமாற்ற தடைச் சட்டத்தால் 17 வயது சிறுவன் கைது: அரசியலமைப்பை மீறுகிறதா உத்தர பிரதேசம்?

கொரோனோ நோய்த்தொற்று பரவல் காரணமாகவும், போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் ’தவறாக நடந்து கொள்ளும்’ வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உத்தர பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு போராட்டத்திற்கு அனுமதியை மறுத்தது.

உத்தர பிரதேசம் – டெல்லிக்குச் செல்ல தடுக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

இந்நிலையில், அரசின் உத்தரவையும் மீறி, இன்று காலைப் போராட்ட களத்தை நோக்கி டிராக்டர்களில் சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் ”இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் கோஷங்களை எழுப்பியப்படி போராட்ட களத்துக்குச் சென்றுள்ளனர் என என்டிடிவியின் செய்தி கூறியுள்ளது.

உத்தர பிரதேசம் – போராடும் விவசாயத் தலைவர்களுக்கு ரூ 50 லட்சம் நோட்டீஸ்

மேலும், மகாபஞ்சாயத்து கூட்டம் நடந்த இடத்தில் பாடல்கள் மூலமாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பாடல்கள் ஒன்றில் ”பிரதமர் மோடி விவசாயிகளின் குரல்களைக் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக் கோரி வரும் வாரங்களில் (பிப் 5 முதல் பிப் 18 வரை) உத்தர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மகாபஞ்சாயத்து கூட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகப் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கேய்ட் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் : திருமணத்திற்காக மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

போராட்டம் நடைபெறுவதை தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பிப்பதை சுட்டிக்காட்டி, ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவர், ஜெயந்த் செளத்ரி “நான் நாளை ஷாம்லி செல்வதற்கான 144 காரணங்கள்” என என்டிடிவியின் செய்தி குறிப்பை இணைத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

கடந்த வாரம் பாகபாத்தின் பராவத் பகுதியில் நடந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

போராடுவதற்கு தடை விதித்த பாஜக அரசு: ஆயிரக்கணக்கில் குவிந்துள்ள விவசாயிகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்