தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவரிடம் கலைச்செல்வி என்ற ஆசிரியை சாதி ரீதியாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோவில், “இப்போ யாரு மெஜாரிட்டியா இருக்கா நீ இந்த **** சாதி, நா அந்த ***** சாதி. ஆனா இப்போ நம்ம பள்ளி பட்டியல் சமுக மக்கள் கிட்ட போக போகுது. நாம அத விடலாமா என்று அந்த ஆசிரியர் கேட்க, எல்லாரும் சமம்தான் என்று அந்த மாணவர் பதில் சொல்கிறார்.
கும்பகோணம்: புதுமண தம்பதிகளை ஆணவக் கொலை செய்த உறவினர்கள் – காவல்துறை வழக்குப்பதிவு
மேலும் “ஓ அப்படி சொல்லுறியா நீ. நல்ல பையன் மாதிரி பேசுறியே. அவங்க கட்டுப்பாட்டுக்கு ஸ்கூல் போச்சுன்னா உங்க ஊரான புளியங்குளத்துக்கே சீட் கொடுக்க மாட்டாங்க. அப்போ நீங்கலாம் எங்க போய் படிப்பிங்க. இது பட்டியல் சமூக மக்களுக்கான பள்ளியா மாறிடும். அதனால உங்க ஊருல இருக்குற பெரியவங்கள இங்க நடக்குற பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தல்ல கலந்துக்க சொல்லணும்” என்று ஆசிரியை கலைச்செல்வி பேசுவது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.
சாதி ரீதியாக பேசிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வரும் வேளையில், ஆசிரியை கலைச்செல்வி, மீனா ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜகவின் கலவரபுத்தி எப்பவுமே மாறாது Dr Sharmila Interview | Nupur Sharma on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.