தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மாவட்ட ஆட்சியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வன்முறை மற்றும் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு இன்று நடைபெற்ற சட்டசபை சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்தது.
சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக நடந்த பிரச்சனை காரணமாக இபிஎஸ் தரப்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை கூட்டத்திலிருந்து வெளியேற்றி சபாநாயகர் உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்கப் பயன்படுத்தும் நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும், அந்த அறிக்கையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் சங்கியா? கூகுள்ல தேடி பாருங்க | பூமர் அங்கிளாக மாறிய சங்கி கண்ணன் | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.