Aran Sei

இந்த ஆட்டுக்குட்டி தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு – பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த தமிழக நிதி அமைச்சர்

தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலணி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என்று பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன், காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட போது அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்தை விட்டு அமைச்சர் புறப்பட்ட போது அவரின் காரை தடுத்து நிறுத்தி பாஜகவினர் காலணியை வீசினர்.

இந்த வழக்கில் பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், காலணி வீச்சு சம்பவம் நடைபெற்றபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சி பிரமுகர் உடன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த ஆடியோ தொடர்பாக மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கள்ளகுறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கு: நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய உயர்நீதிமன்ற தீர்ப்பு – பாலகிருஷ்ணன் கண்டனம்

இதன் தொடர்ச்சியாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த ஆட்டின் (சிம்பிள்) பெயரைகூட நான் குறிப்பிட விரும்பவில்லை” என்று பதிவிட்டு, “தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலணி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு” என்று குறிப்பிட்டு அண்ணாமலை விமான நிலைய அஞ்சலியில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படத்தையும், காலணி வீசிச்சு தொடர்புடைய சில செய்தித்தாள் படங்களையும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமையும் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Madras Hc Judgement on Kallakurichi Case – Tada Rahim | Kallakurichi Case Latest Update | TN CBCID

இந்த ஆட்டுக்குட்டி தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு – பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த தமிழக நிதி அமைச்சர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்