75வது சுதந்திர தினத்தை தற்போது கொண்டாடும் போதும் இந்தியாவில் சட்டம், நீதியின் நிலை இதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் பொது வெளியில் நின்று பிரதமரை பிடிக்கவில்லை என்று கூறினால், யாரேனும் என்னை தாக்கி, கைது செய்து, காரணம் கூறாமல் சிறையில் அடைப்பார்கள் என்று முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா நேற்று கூறி இருந்தார். 75வது சுதந்திர தினத்தை தற்போது நாடு கொண்டாடும் போதும், இந்தியாவில் சட்டத்தின் நிலையும் நீதியின் நிலையும் இதுதான்” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்க்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதையும் வரவேற்றுள்ளார்.
Poovulagin Nanbargal exposes Dmk double standards – Vetriselvan Interview | Parandhur Airport Issue
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.