சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள அவர், ஆட்சியாளர்களை சமாதானப்படுத்த டெல்லி காவல்துறை முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த நவீன் ஜிண்டால், பத்திரிக்கையாளர் சபா நக்வி, மௌலானா முப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி, அனில் குமார் மீனா மற்றும் ஓவைசி மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
முகமது நபியை விமர்சித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
இச்சம்பவம் குறித்து பேசியுள்ள ஓவைசி, யதி நரசிங்கானந்த், நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு எதிராக வழக்குகளை தொடர டெல்லி காவல்துறைக்கு தைரியம் இல்லை. இந்துத்வாவாதிகளை புண்படுத்தாமல் இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி என்று டெல்லி காவல் துறையினர் யோசித்து இருக்கலாம்” என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
டெல்லி காவல்துறை இரண்டு பக்கவாதம் நோய்க்குறிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் வெளிப்படையாக நபியை அவமதித்தவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். மற்றொருபுறம் பாஜக ஆதரவாளர்களை சமாதானப்படுத்தவும் வேண்டும். ஆகையால், இரு தரப்பிலும் வெறுப்பு பேச்சு இருப்பது போல் தோற்றமளிக்க டெல்லி காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
“முதல் தகவல் அறிக்கையின் ஒரு பகுதியைப் பெற்றுள்ளேன். நான் பார்த்த வரையில், குற்றம் என்ன என்பதைக் குறிப்பிடாத முதல் தகவல் அறிக்கை இதுதான். ஒரு கொலையைப் பற்றிய எஃப்ஐஆரை கற்பனை செய்து பாருங்கள், பாதிக்கப்பட்டவர் இரத்தம் கசிந்து இறந்தார் ஆனால் காவல்துறையினர் ஆயுதத்தைக் குறிப்பிடவில்லை என்றால் எப்படி இருக்கும். என்னுடைய எந்தக் குறிப்பிட்ட கருத்துக்கள் எஃப்ஐஆரை பதிய வழிவகுத்தது என்று எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை எம்முடைய வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து, தேவைக்கேற்ப தீர்வு காண்போம். இந்த தந்திரங்களால் நாங்கள் பயப்பட மாட்டோம். வெறுக்கத் தக்க பேச்சுக்களை விமர்சிப்பதையும், வெறுப்பூட்டும் பேச்சுக்களை வழங்குவதையும் சமமாக பார்க்க முடியாது,” என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
Source: indiatoday
Nupur Sharma வின் பகீர் பின்னணி Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.