Aran Sei

‘அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி’ – தங்கம் கடத்தல் குற்றச்சாட்டை சாடிய கேரள முதலமைச்சர்

credits : indian express

ங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார். இது அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்றும் மக்கள் இதை ஏற்கனவே நிராகரித்துள்ளனர் என்று பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

2020 தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன், அவரது மனைவி மற்றும் மகளுக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்திருந்தார்.

அவரது குற்றச்சாட்டுகளை நிராகரித்த பினராயி விஜயன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதே அறிக்கையை மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

நிலக்கரி இறக்குமதிக்கு கூடுதல் விலையில் அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் – தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்ட முயற்சி என ஒன்றிய அரசு தகவல்

தங்கம் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர்,”குற்றம் சாட்டப்பட்டவர்களின் இந்த கருத்துக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. பொதுமக்கள் ஏற்கனவே இந்த நிகழ்ச்சி நிரலை நிராகரித்துள்ளனர். ஒரு இடைவெளிக்குப் பிறகு, அதே குற்றச்சாட்டை மீண்டும் வைக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டில் ஒரு துளி கூட உண்மை இல்லை. இந்தப் பொய்களைப் பரப்புவதன் மூலம், அரசாங்கத்தின் உறுதியையும், அரசியல் தலைமையின் உறுதியையும் அழித்துவிட முடியும் என்று நினைத்தால் அது ஒரு வீண் நடவடிக்கை என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்,” என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகளின் அழுத்தத்தால்தான் நுபுர் சர்மா மீது பாஜக நடவடிக்கை எடுத்தது – ஒவைசி குற்றச்சாட்டு

இதன் மூலம் பயனடையலாம் என நினைப்பவர்களுக்கு சமூகம் தகுந்த பதிலடி கொடுக்கும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அரசாங்கத்தை களங்கப்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் போலி குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிப்பார்கள். கேரளாவின் விரிவான வளர்ச்சி மற்றும் சமூக நலனுக்கு பாடுபடுவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Source: ndtv

வெளியான மிரட்டல் கடிதம் வெளிவராத பகீர் உண்மைகள் Vikraman Interview | Nupur Sharma

‘அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி’ – தங்கம் கடத்தல் குற்றச்சாட்டை சாடிய கேரள முதலமைச்சர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்