மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதால்தான் அவருடைய கணக்கு முடக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் குறித்து திருமுருகன் காந்தி குறிப்பிடுகையில், “என்னுடைய ட்விட்டர் கணக்கு காரணமின்றி மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. மே17 இயக்கத்தின் மீதான பாஜகவின் அடக்குமுறை எல்லைகடந்த அளவில் இருக்கிறது. அடிப்படை கருத்துரிமையை மறுக்கும் பயங்கரவாத பாசிச நடவடிக்கைகள் முழுவீச்சில் அனைவரின் மீதும் பாஜக நடத்துவதற்கு முன்பாக சனநாயக ஆற்றல்கள் வலிமையாக எதிர்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 3 முறை முகநூலும், 2முறை ட்விட்டரும், அமைப்பின் அதிகாரபூர்வ முகநூலும், மின்னஞ்சலும், யூட்யூப் கணக்குகளும் கடந்த காலத்தில் முடக்கப்பட்டது. இந்நிலை எமக்கு இன்று நடப்பது நாளை எவருக்கும் நடக்கும் என்கிற கவலை எங்களுக்குண்டு. இது போன்ற அடக்குமுறையை எதிர்த்து உங்கள் குரல் ஒலிக்க வேண்டுமென விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
INDIAN CYBER DEFENDER @IndianCDefender என்கிற ட்விட்டர் கணக்கை சுட்டிக்காட்டிய அவர், மேற்குறிப்பிட்ட இந்த ட்விட்டர் கணக்கு பாஜகவினரால் நடத்தப்படுகிறது. இக்கணக்கு பல சனநாயக நபர்களின் கணக்குகளை முடக்கி உள்ளது. இதை இவர்கள் குறிவைத்து செயல்படுவதாக இவர்களே அறிவிக்கின்றனர். அனைவரின் கவனத்திற்காக இதை கொண்டு வருகிறேன் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.