Aran Sei

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் மனு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

Image Credits: Wikipedia

ர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு வழங்கிய அனுமதியை திரும்பப்பெறக்கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

கர்நாடகா: இந்துக் கடவுள் சிலையை தொட்ட பட்டியல் சமூக சிறுவனுக்கு ரூ.60,000 அபராதம் – தலித் அமைப்புகள் போராட்டம்

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னைஉயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்பற்றும். இந்த அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தார். அப்போது, ஆர்எஸ்எஸ் இனிப்பு வழங்கி கொண்டாடியது. மகாத்மா காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது என திருமாவளவன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி இளந்திரையன் முன் இன்று காலை ஆஜரான திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள், இந்த வழக்கை இன்று அல்லது நாளை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தனர்.

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனு

ஆனால், இந்த வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் நீங்கள் (திருமாவளவன் தரப்பு) மனுதாரராகவோ, எதிர்மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.

மேலும், மனுவின் எண்ணிடப்படக்கூடிய அந்த நடைமுறைகள் நிறைவடைந்து விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால் அப்போது விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க தனி நீதிபதி ஏற்க மறுத்ததை தொடர்ந்து திருமாவளவன் தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வில் ஆஜராகி அதேகோரிக்கையை முன்வைத்து முறையிட்டனர்.

ஒடிசா: தலித் மருத்துவர் பிரேத பரிசோதனை செய்ததால் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

ஆனால், தலைமை நீதிபதி அமர்வு இந்த முறையீடு தொடர்பாக மேல்முறையீட்டு மனுவாகதான் தாக்கல் செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என திருமாவளவன் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு, மனுவை தாக்கல் செய்தால் அது பரீசிலிக்கப்படும். மனு எண்ணிடப்படும், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

சேற்றில் புரளும் பாஜக, நாதஸ் திருந்தமாட்டான் | Arunan Interview | RSS Parade | MK Stalin accuses BJP

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் மனு – அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்