Aran Sei

திமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காக்க வேண்டும் – முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் அங்கே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

30 வார்டுகள் கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் இன்று, விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரை எதிர்த்து திமுகவினர் மனு தாக்கல் செய்தனர். இதனை அடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயந்தி 23 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 3 வாக்குகளும் பெற்றனர். அத்துடன் 3 செல்லாத வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக வேட்பாளர் நெல்லிக்குப்பத்தில் தோற்கடித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி விசிக வேட்பாளர் சின்னவேடி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுகவை சேர்ந்த சாந்தி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், “மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ‘ராஜினாமா’ செய்ய வைத்து ‘கூட்டணி அறத்தைக்’  காத்திட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தைக் காக்க வேண்டும் – முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்