Aran Sei

பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணி – மகாராஷ்டிர முதல்வரை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்வை மும்பைக்கு வருமாறு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 20 ஆம் தேதி மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்திரசேகர் ராவ் சந்திக்கிறார்.

பாஜகவின் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகப் போராடி வரும் சந்திரசேகர் ராவுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகிய இருவரிடமும் அண்மையில் தொலைப்பேசியில் உரையாடிய வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றை அமைக்க ஆலோசனை தெரிவித்தார்.

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசியலமைப்பு அமைப்பிற்கும் ஆபத்து வந்துள்ளது. அதைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜியின் அழைப்பிற்குப் பிறகு, “பாஜகவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் உத்தவ் தாக்கரே உடன் நானும் திரிணாமூல் காங்கிரஸ் தலைமையை விரைவில் சந்திக்க இருப்பதாக சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளாத மாநில ஆளுநர்கள், தங்களது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதையும், அரசியலமைப்புச் சட்ட மீறல்களைக் குறித்து தனது வேதனையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி என்னிடம் தொலைப்பேசியில் பகிர்ந்து கொண்டார். மாநில சுயாட்சி பற்றிய திமுகவின் உறுதியைத் தெரிவித்தேன். டெல்லிக்கு வெளியே விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாடு நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு எதிரான போரில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவிடம் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.தேவகவுடா உறுதியளித்ததாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Source : newindianexpress

பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணி – மகாராஷ்டிர முதல்வரை சந்திக்கும் தெலுங்கானா முதல்வர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்