Aran Sei

பாஜகவில் இணையுமாறு எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டினார்கள் – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரை பாஜகவில் இணையுமாறு பாஜகவினர் அணுகியதாகவும் அதற்கு மறுத்தால் பொய் வழக்குகள், சிபிஐ விசாரணை, அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று பாஜக மிரட்டியதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் குமார் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

சமூகத்தைப் பிளவுபடுத்த பாஜக விரும்புகிறது – பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு

”இது மிகவும் தீவிரமான விஷயம். நிலைமையை ஆய்வு செய்வதற்காக கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் எனது இல்லத்தில் மாலை 4 மணிக்கு கூட்டப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“அவர்கள் (நான்கு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள்) பாஜகவில் இணைந்தால் தலா 20 கோடி ரூபாயும், மற்ற எம்எல்ஏக்களை அவர்களுடன் அழைத்துச் சென்றால் 25 கோடி ரூபாயும் வழங்கப்படும்” என்று பாஜக கூறியதாக சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சிக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

“அவர்கள் (பாஜக தலைவர்கள்) எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இந்த வாய்ப்பை ஏற்று பாஜகவில் சேராவிட்டால் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா போல் அவர்களும்(சட்டமன்ற உறுப்பினர்களும்) பொய் வழக்குகள், சிபிஐ விசாரணை, அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் விசாரணையை சந்திக்க நேரிடும்” என்று பாஜக கூறியதாக சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை வஞ்சகம் செய்து பாஜகவுக்கு கொண்டு வந்து கெஜ்ரிவால் அரசாங்கத்தை கவிழ்க்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சிகள் மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆம் ஆத்மியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து பிரித்து டெல்லி அரசாங்கத்தை கவிழ்க்க மோடி முயற்சி செய்கிறார். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார். அவர்களுக்கு பணம் கொடுக்க தனது ஆட்களை அனுப்புகிறார். அவர்கள் பக்கம் மாறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்” என சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

எண்டிடிவியின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம் – நடந்தது என்ன?

“மகாராஷ்டிராவில் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை ஏக்நாத் ஷிண்டே தலைமையில் விலைக்கு வாங்கி வெற்றியடைந்துள்ளீர். ஆனால் மணீஷ் சிசோடியா விஷயத்தில் தோல்வியடைந்ததால் இப்போது எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சோதனை நடத்தப்படுகிறது,” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். .

வெட்கப்படுகிறேன் மோடிஜி; இதுபோன்ற முயற்சிகளை நிறுத்திவிட்டு நாடு திர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள் என்று பிரதமரை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: newindianexpress

Kallakurichi Sakthi School students statement recorded in court – Sundharavalli | Ravikumar Sakth

பாஜகவில் இணையுமாறு எங்கள் எம்எல்ஏக்களை மிரட்டினார்கள் – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்