அனைத்து சுதந்திரத்தையும் உடைத்து இருட்டு அறைக்குள் தள்ளப்பட்ட குடிமகனின் மகள் நான் என்று 75 வது இந்திய சுதந்திர தின விழாவில் பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் மகள் மெஹனாஸ் கப்பன் பேசியுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆதிக்கச் சாதி ஆண்களால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொகொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது குறித்து செய்தி சேகரிக்க சென்ற அவரை உபா சட்டத்தின் (சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்) கீழ் கைது செய்தது காவல்துறை. கடந்த அக்டோபர் 2020 முதல் சிறையில் இருந்து வருகிறார்,.
நோட்டபரம் ஜிஎல்பி அரசுப் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் பேசிய அவருடைய மகள் மெஹனாஸ் கப்பன், “நாம் இன்னும் இந்தியாவை சிறப்பான உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பிரிவினையும் முரண்பாடும் இல்லாத ஒரு நல்ல நாளைக் கனவு காண வேண்டும். இந்திய விடுதலைக்காகப் போராடிய அனைத்து தேசப்பக்தர்களையும் நினைவு கூர்ந்து, இந்தியாவின் சாமானிய குடிமக்களின் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்பதை மட்டும் சொல்லி உரையை நிறுத்திக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்,” என்று அக்குழந்தை பேசியுள்ளது.
பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டதில் இருந்து அவரை விடுவிக்கக் கோரி கேரள பணிப் பத்திரிக்கையாளர் சங்கமும் (KUWJ) சித்திக் மனைவியும் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: thenewsminute
நித்தியானந்தா மாதிரி தனி இந்து நாடா? I Aransei Debate
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.