மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில், பிப்ரவரி 21 ஆம் தேதி மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டதை அடுத்து, சட்டமன்ற தேர்தலைப் பாஜக, போர் போல் கையாளுகிறது எனத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பிப்ரவரி 20 ஆம் தேதி மேற்கு வங்கம் மாநிலத்திற்கு, மத்திய ஆயுத காவல் படையின் 12 கம்பெனிகளை மத்திய அரசு அனுப்பியது. மேலும், பல்வேறு மத்திய படைகளின் 125 கம்பெனிகள் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் வர உள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் முன்னரே, அதிக அளவில் மத்திய படைகள் குவிக்கப்படுவது அசாதாரண நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ”வாக்காளர்களின் மன உறுதியை அதிகப்படுத்தும்” விதமாக மத்திய பாதுகாப்பு படையினர் ரோந்து மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய படைகளுடன் இணைந்து, மேற்கு வங்க காவல்துறையினர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். பீர்பம், பாங்குரா, பர்த்வான், ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாக்கள், மேற்கு மிட்னாபூர் போன்ற மாவட்டங்களில் ரோந்து மற்றும் அணிவகுப்புகள் காணப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்நத் பிரத்யா பாசு, “பாஜக இதை(சட்டமன்ற தேர்தலை) தேர்தலாக கருதாமல் போர் போலக் கருதுகிறது. மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும், எனவே அவர்கள் பிரங்கியை கூட அனுப்புவார்கள்” எனக் கூறியுள்ளார்.
மத்திய படைகளின் வருகை தொடர்பாக பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி, ”தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கிய பிறகு எந்தப் பிரச்னையும் வரக் கூடாது” என்பதை உறுதிப்படுத்த மத்திய படைகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன என்றும், ”வாக்காளர்களின் மன தைரியத்தை அதிக்கபடுத்தவே, ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றும் கூறியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.