Aran Sei

பெண்களின் திருமண வயது குறித்த ஆய்வுக்குழுவில் ஒரேயொரு பெண் – மறுக்கப்படுகிறதா பெண்களின் பிரதிநித்துவம்?

பெண்களின் சட்டப்பூர்வமான திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும் குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) மசோதாவை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்ற 31 உறுப்பினர்களில் ஒரே ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே தலைமையிலான இந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் 31 உறுப்பினர்களில் இடம்பெற்ற ஒரே பெண் உறுப்பினர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான  சுஷ்மிதா தேவ் மட்டுமே.

சனாதானத்தை அழிப்பதே காங்கிரஸின் கொள்கை  – கே.எஸ்.அழகிரி

“பெண்களின் திருமண வயதை உயர்த்தும் குழுவில் அதிகமான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன் என்று சுஷ்மிதா தேவ் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் கூறியுள்ளார்.

பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் குழுவில் அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரான சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்க மறுத்த நிர்வாகம் – உருது, அரபு மொழி பேச தடை விதித்ததாக மாணவிகள் புகார்

கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவை மாநிலங்களவை நிர்வகிக்கும். இதில் மேலவையிலிருந்து பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், கீழவையிலிருந்து 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

Source : TheWire

 

பெண்களின் திருமண வயது குறித்த ஆய்வுக்குழுவில் ஒரேயொரு பெண் – மறுக்கப்படுகிறதா பெண்களின் பிரதிநித்துவம்?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்