அக்னிபத் திட்டத்தைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
ஆயுதப் படைகளுக்கான வீரர்களை ஒப்பந்த முறையில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தை ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் ஒரு முழுமையான திட்டமாக இதை பார்க்கக்கூடாது என்றும் அஜித் தோவல் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவுக்கு நல்லது என்றால் நாட்டுக்கு ஆபத்தானது – ராகுல் காந்தி விமர்சனம்
இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர்,. “அக்னிபத் திட்டத்தைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. இது (அக்னிபத் திட்டம்) ஒரே இரவில் கொண்டு வரப்பட்ட திட்டமல்ல. பல பத்தாண்டுகளாக விவாதிக்கப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தின் அவசியத்தை அனைவரும் உணர்ந்திருந்தாலும் இதை நடைமுறை படுத்துவதற்கு அஞ்சினார்கள். நாட்டை வலுவாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற வேண்டும் என்றால் எந்த ஆபத்தையும் எதிகொள்ளும் திறன் பெற்ற பிரதமர் மோடி போன்றோர்கள்தான் தேவை.
நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு நரேந்திர மோடி அரசு இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளது. உபகரணங்கள், அமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள், எதிர்கால கொள்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது இத்திட்டம் என்று அவர் கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது – ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
அக்னிபத் திட்டத்தை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இது ஒரு தனியான திட்டம் அல்ல. 2014-ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்தியாவை பாதுகாப்பாகவும் வலிமையாகவும் மாற்றுவது குறித்து எடுக்கப்பட்ட முடிவுகளில் இதுவும் ஒன்று.
“இத்திட்டம் நான்கு விசயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதற்கு, உபகரணங்களில் மாற்றம், அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளில் மாற்றம், தொழில்நுட்பத்தில் மாற்றம், மனிதவளம் மற்றும் கொள்கைகளில் மாற்றம். இவை எல்லாம் எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்,” என்று அஜித் தோவல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள்குறித்து பேசிய அவர், ” அக்னிபத்துக்கு எதிராக காழ்ப்புணர்ச்சி இல்லாமல் குரல் எழுப்புவது நியாயமானது. உரிமைக்காக உங்கள் குரலை உயர்த்துவது நியாயமானது. இது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் பொது சொத்தை நாசப்படுத்தும் வன்முறையை அனுமதிக்க முடியாது. மேலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
Source: Theindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.