கிளப் ஹவுஸ் பயனாளர்களின் செல்போன் எண்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வந்த செய்தியில் உண்மையில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
38 லட்சம் பயனாளர்களின் செல்போன் எண்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக இணைய பாதுகாப்பு வல்லுனர் ஜித்தேன் ஜெயின், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதில் பயனாளர்களின் செல்போன் எண்கள் மட்டுமல்லாமல் அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்ட எண்களும் கசிந்திருப்பதாகவும். இதனால் கிளப்ஹவுஸ் பயன்படுத்தாதவர்கள் எண்கள் கூடக் கசிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும், எந்த ஒரு தகவல் திருட்டும் நடைபெறவில்லை என்றும் கிளப்ஹவுஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
”100 கோடிக்கும் அதிகமான அலைப்பேசி எண்களை கணினி கண்டறிந்துள்ளது. அவற்றில் சில எண்கள் எங்கள் தரவுகளோடு ஒத்துப்போகின்றன. இது தற்செயலான ஒன்று” என அவர் கூறினார்.
மேலும், தனியுரிமையும் பாதுகாப்பு கிளப்ஹவுசிற்கு முக்கியம் என்பதால் அவை சார்ந்த பாதுகாப்பு நடைமுறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Source : Tribune India
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.