Aran Sei

தேனி: கழிவறையை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் விசாரணை

தேனியில் அரசுப் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 180-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில் சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

உத்தரகண்ட்: அரசுப் பள்ளியில் தலித் பெண் சமையல்காரர் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்கச்சாதி மாணவர்கள்

அந்த காணொளியில் பள்ளி சீருடையில் இருக்கும் 2 மாணவர்கள் குழாயில் தண்ணீர் பிடித்து கழிவறையில் ஊற்றி சுத்தம் செய்கின்றனர். பின்னர் அவர்கள் அந்த குழாய் தண்ணீரை மூடி விட்டுச் செல்கின்றனர். இதேபோல புகைப்படங்களில் மாணவிகள் சிலர் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை துடைப்பத்தால் அகற்றுகின்றனர். மாணவர்கள் ஒட்டடை அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்த காணொளி மற்றும் புகைப்படங்களை கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் பள்ளிக்கு படிப்பதற்காக அனுப்பிய தங்கள் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதை கண்டு வேதனை அடைந்துள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் இதுபோன்ற செயல்களால் மக்கள் மத்தியில் அரசுப் பள்ளி மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி இல்லை – ஏட்டளவில் மட்டுமே செயல்படுகிறதா அரசின் திட்டங்கள்?

சமூக வலைத்தளங்களில் காணொளி பரவியதை தொடர்ந்து, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தார். மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவையே கொள்ளையடிக்குறாங்க | அதானியை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் | Aransei Roast | Adani

தேனி: கழிவறையை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் விசாரணை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்