இந்தியாவில் ஜனநாயகம் அழிந்தால் உலகிற்கு ஆபத்து என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லண்டனில் பிரிட்ஜ் இந்தியா என்ற அமைப்பு சார்பில் ‘இந்தியாவுக்கான யோசனைகள்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (மே 20) நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர்தேஜஸ்வி யாதவ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூ மொய்த்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்கு அப்பாற்பட்டது – ராகுல் காந்தி
இந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் 2 விதமான வடிவமைப்புகள் உள்ளன. ஒன்று கூச்சலிடுவது, மக்களின் குரலை ஒடுக்குவது. இந்த செயலை பாஜக செய்கிறது. மற்றொன்று, மக்களின் கருத்துகளை கேட்டறிவது. அதை காங்கிரஸ் செய்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் ஜனநாயகம் சர்வதேச அளவில் மிகுந்த பயனை அளிக்கும் விஷயமாக உள்ளது. உலகத்தின் நங்கூரமாக விளங்குகிறது. அது அழிந்தால், அது உலகத்திற்கே ஆபத்தாய் முடியும்.” என்று கூறியுள்ளார்.
‘இந்தியா என்பது மக்களுடன் நேரடித் தொடர்புடையது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியாவை வெறும் நிலப்பரப்பாக பார்க்கிறது. அதனால் தான் அது ஒரு சிலர் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது. எங்களைப் பொறுத்த வரை இந்தியாவில் உள்ள அனைவருக்குமே பலன் கிடைக்கவேண்டும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவுடனான உக்ரைனின் உறவை விரும்பாத ரஷ்யா, உக்ரைனின் 2 பிராந்தியங்களை அங்கீகரிக்க மறுக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுக்கிறது. அதே போல இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. லடாக், டோக்லாம் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பான்காங் ஏரி பகுதியில் மிகப்பெரிய பாலம் ஒன்றை சீனா அமைத்துள்ளது. தற்போது இரண்டாவது பாலத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. சீனா எதற்கோ தயாராகிக் கொண்டிருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தைக் கைப்பற்றும் முயற்சியில் படைகளை சீனா தயார் செய்து வருகின்றது. அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பதை சீனா விரும்பவில்லை. ஆனால், இது குறித்து பேச ஒன்றிய அரசு தயாராக இல்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: The Hindu Tamil
ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan | Nenjukku Needhi | Udhayanidhi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.