Aran Sei

மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி மாநிலத்தில் ஆட்சி நடைபெறுவதை ஒன்றிய அரசு உறுதி செய்யும் 355 ஆவது சட்டப்பிரிவை அமல்படுத்த வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

திரிணாமூல் பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்ட சிறிது நேரத்தில் 8 வீடுகளுக்கு தீ வைப்பு -2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

2022 மார்ச் 21 அன்று மேற்குவங்கத்தில் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போக்டுய் கிராமத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் இரு குழுக்களிடையே வன்முறை வெடித்தது. பஞ்சாயத்து துணைத் தலைவர் ஸ்ரீ பாது ஷேக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கடந்த மாதம் மட்டும் 26 அரசியல் கொலைகள் மாநிலத்தில் நடந்துள்ளதாகவும் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

அனிஸ் கான் மரணத்திற்கு மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

ஒவ்வொரு மாநிலத்தையும் வெளிப்புற ஆக்கிரமிப்பு மற்றும் மாநிலத்திற்குள்ளேயே நடக்கும் பிரச்சினைகளின் ஒன்றிய அரசே போது தலையிட்டு அரசியலமைப்பு விதிகளின் படி அந்தந்த மாநிலங்கள் செயல்படுகின்றனவா என்று உறுதி செய்வது தான் 355 ஆவது சட்டப்பிரிவு ஆகும்.

Source : The Hindu

மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கை சீர்செய்ய ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்