மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முரண்பட்ட கருத்துக்களுக்கு அனுமதியளிப்பதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தாளத்திற்கு உலகம் ஆடாது என்பதை மோடி அரசு உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தரவுகள் (Data) இல்லாத அரசு என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறியப்பட்டிருக்கிறது. தற்போது அந்த அரசு பல்வேறு கருத்துக்ளுக்கு அனுமதிப்பதில்லை” என்றும் கூறியுள்ளார்.
இந்தக் காரணத்தால்தான் 180 நாடுகள் கொண்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா கடைசி இடத்தில் இருக்கிறது என்கிற ஆய்வை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான கொரோனா இறப்புகள் மற்றும் உலகளாவிய பசி குறியீட்டின் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
முஹம்மது நபியை அவமதித்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை – ஈரானின் கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தாளத்திற்கு உலகம் ஆடாது என்பதை மோடி அரசு உணர வேண்டும் என்று ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
Source: Thenewindianexpress
Nupur Sharma வின் பகீர் பின்னணி Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.