இந்தியாவில் ஏற்பட்ட நிலக்கரி பற்றாக்குறையினால் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்குமாறு ஒன்றிய அரசு மாநிலங்களை கட்டாயப்படுத்துகிறது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை விட மூன்று மடங்கு அதிகமான விலை கொடுத்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை விலை கொடுத்து வாங்குவதற்கான தேவையை நீக்குமாறு ஒன்றிய அரசிற்கு அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை ராஜஸ்தான் வாங்கினால் ரூ.1,736 கோடி நிதிச்சுமையை சுமக்க வேண்டியிருக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியால் பொது நுகர்வோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
Source : NDTV
பேரறிவாளன் விடுதலை தமிழர்களுக்கு திருவிழா Pasumpon Pandian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.