இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை மறுசீரமைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற 3 நாள் காங்கிரசின் சிந்தனை அமர்வு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியால் அமைக்கப்பட்ட பொருளாதாரம் குறித்த குழுவின் தலைவரான சிதம்பரம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி உறவுகள் குறித்து விரிவான மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.
மாநிலங்களின் நிதி நிலைமை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது, இதனை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகள், மக்கள்தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 10 விழுக்காட்டினரின் கடுமையான வறுமை, 2021 ஆம் ஆண்டின் உலகளாவிய (116 நாடுகள் உள்ள பட்டியலில்) பட்டினி குறியீட்டில் இந்தியாவின் 101 ஆவது இடத்தில் உள்ளது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பரவலாக உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றையும் நிவர்த்தி செய்ய நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மீட்டமைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Source : NDTV
தமிழ்நாடு முழுக்க அரசு Beef Biriyani திருவிழா நடத்தணும் | Sundharavalli
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.