Aran Sei

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

வெறுப்பு பிரச்சாரங்கள் இனியும் நீடித்தால் இனி அவர்கள் தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை என்று பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் உலகரங்கில் இந்தியா பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவிலிருந்து அவர் இடைக்காலமாக நீக்கப்பட்டிருந்தாலும் கூட அவரது பேச்சு ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் தீரவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா இந்தியாவில் வெறுப்பு அரசியல் மேலோங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மதச் சுதந்திரம் மோசமடைந்துள்ளன – சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அறிக்கை 

“பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு இந்த விஷம் பரவுவதைத் தடுக்க வேண்டும். ரிஷிகேஷில் தர்ம சன்சத் நிகழ்ச்சியில் பேசப்பட்டதை பிரதமர் கேட்டிருப்பாரானால், இந்த வெறுப்பு விஷப் பரவலை அவர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில், வங்கதேசத்தில், ஆப்கானிஸ்தானில் நுபுர் சர்மாவின் பேச்சுக்கு மரண தண்டனையே கொடுக்கப்படும். ஆனால் இங்கு லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகள் புண்பட்ட பின்னரும் கூட எந்த ஒரு கண்டனமும் வரவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் நுபுர் சர்மா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பது எல்லாம் நேர்மையற்ற செயல். இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் இனிமேல் வந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

‘உங்களின் மௌனம் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு குரல்களுக்கு தைரியம் கொடுக்கிறது’- பிரதமருக்கு ஐஐஎம் ஆசிரியர், மாணவர்கள் கடிதம்

நீங்கள் அமைதி, ஒற்றுமை பற்றி பேசுபவர்களை சிறையில் தள்ளுகிறீர்கள். இன அழிப்பு பற்றி பேசுபவர்களை பட்டும் படாமல் தட்டிக்கேட்கிறீர்கள். இந்த இரட்டை நிலைப்பாடு கூடாது. பாஜக ஒன்றும் விளிம்புநிலை அமைப்பு இல்லை, நுபுர் சர்மா ஒன்றும் விளிம்புநிலை மனிதர் விளிம்பு அமைப்புகள் அல்ல. ஒரு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்புணர்ந்து பேச வேண்டாமா?

தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் அவர் வெறுப்பை வளர்த்துள்ளார். எதிர்க் கருத்து உடையவர்களை எதிர்ப்பதற்காகவே உற்பத்தி செய்யப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் இவை. இதே நிலை நீடித்தால் தேவாலயங்களிலும் இனி அவர்கள் சிவலிங்கத்தை தேடும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே நான் நம்புகிறேன்.

‘கிறிஸ்தவ மக்கள் மீதான திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் கலக்கமடையச் செய்கின்றன’ – எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆழ்ந்த கவலை

ஒரு பசுவைக் கொன்று விட்டான் என்ற சந்தேகத்தின் பேரில் மக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள், இறந்த பசுவின் தோலை உரித்த தீண்டத்தகாதவர்கள் பொதுவெளியில் சாட்டையால் அடிக்கப்படுகிறார்கள். இது போன்ற வெறுப்பு சம்பவங்கள் இங்கு நடக்க கூடாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் பின்தங்கிய நிலைக்கு இத்தகைய செயல்களும் காரணம். காட்டு மிராண்டித்தனமாக சில நாடுகளில் செய்வதை நாம் எந்தவிதத்திலும் பின்பற்றக் கூடாது என்று நஸ்ருதீன் ஷா தெரிவித்துள்ளார்.

Source : The Print

படுக்கையறையை எட்டிப்பார்க்கும் ஆபாச அண்டா Bayilvan Ranganathan

’தேவாலயங்களிலும் சிவலிங்கத்தை தேடும் காலமும் வெகுதொலைவில் இல்லை’: திரைக்கலைஞர் நசிருதீன் ஷா கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்