இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்த நிலையில், பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடவேண்டுமென கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோர் அடக்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தான் உச்சநீதிமன்றத்தின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை நீங்கள் ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? எந்த அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது? நீங்கள் நீதிமன்றத்திற்கு வருவதால் நாங்கள் சட்டத்தை காற்றில் பறக்கவிட வேண்டுமா? என மனுதாரருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், மனுத் தாக்கல் செய்த மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து மனுவை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தெரிவித்தார். இதனையடுத்து, பசு மாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விடவேண்டுமெனத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Source : telegraphindia
Tamilnadu Police tweet in favour of RSS | Rss Rally in Tamilnadu | MK Stalin | Deva’s Update 37
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.