Aran Sei

தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை: இந்தியத் தொல்லியல் துறை தகவல்

க்ராவில் உள்ள தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, அங்குள்ள 20 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) உத்தரவிடக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் அயோத்தி மாவட்ட பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்ததோடு, மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தனது பருவ இதழில் தாஜ்மகாலில் உள்ள அறைகளின் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை என்று இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த நிலையில் உள்ள அந்த அறைகளைப் பராமரிக்கும் பணி நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘தாஜ்மஹாலில் இந்து கடவுள் சிலைகள் இருக்கலாம்; ஆராய ஒரு குழுவை அமையுங்கள்’ – பாஜக நிர்வாகி நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ள இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமானது, பின்னர் அதை ஷாஜகான் அபகரித்துக் கொண்டார் என்று ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான தியா குமாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.

Source : hindu tamil

பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview

தாஜ்மஹாலில் உள்ள அறைகளில் ரகசியம் எதுவும் இல்லை: இந்தியத் தொல்லியல் துறை தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்