Aran Sei

அரசுத் துறையைப் போலவே தனியார் துறையும் முக்கியமானது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

credits : ndlf

ரசுத் துறையைப் போலவே தனியார் துறையும் முக்கியமானது. ஆனால், மக்களின் மனநிலை இன்னமும் மாறவில்லை. அவர்கள் தனியார் நிறுவனங்களைப் பற்றி அவ்வளவு நன்றாகப் பேசுவதில்லை” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று (ஜூன் 20) பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான பல்முனை ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முன்னதாக, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் பல்கலைக்கழகத்தில் பக்ஷி பார்த்தசாரதி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி மூளை ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்த பிரதமர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தையும், பாரத ரத்னா டாக்டர் பி. ஆர். அம்பேகர் சிலையையும் திறந்து வைத்தார்.

இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?

தொழில்நுட்ப கேந்திரங்களாக மாற்றப்பட்ட 105 தொழில் பயிற்சி நிறுவனங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அரசின் அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் பேசிய பிரதமர் “அரசுத் துறையைப் போலவே தனியார்த் துறையும் முக்கியமானது. ஆனால், மக்களின் மனநிலை மாறவில்லை. அவர்கள் தனியார் நிறுவனங்களைப் பற்றி அவ்வளவு நன்றாகப் பேசுவதில்லை. அரசு அளித்து வரும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு இளைஞர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். கடினமாக உழைக்கும் இளைஞர்களுக்கு அரசு சிறந்த வாய்ப்பை அளிக்க தயாராக இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : newindianexpress

Agnipath திட்டம் ராணுவத்தையே முடக்கிடும் EX Indian Army K Malaiappan Interview

அரசுத் துறையைப் போலவே தனியார் துறையும் முக்கியமானது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்