Aran Sei

‘மக்களின் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது’ – சு. வெங்கடேசன்

ன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு.

மக்களின் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது.

போராட்டத்துக்கு புது இலக்கணம் வகுத்து, ஜனநாயக மாண்புகளுக்கு வலுசேர்த்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றிகள் பல.

களத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் என்றென்றும் சுடர்வீசும். என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “போராட்டத்தின் முன்னே யாராட்டமும் செல்லாது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக மோடியை அறிவிக்க வைத்துள்ளது விவசாயிகளின் போராட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘மக்களின் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது’ – சு. வெங்கடேசன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்