“கியான்வாபி மசூதி தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. ஏற்கெனவே நாங்கள் பாபர் மசூதியை இழந்துவிட்டோம். இப்போது மீண்டும் இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை” என்று ஹைதராபாத் மக்களினை உறுப்பினரும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் படி, எந்தவொரு நபரும் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தையும் வேறு மதத்தினருடையதாகவோ அல்லது அதே மதத்தின் உட்பிரிவினுடையதாகவோ மாற்றக் கூடாது. ஆனால், வாரணாசி நீதிமன்ற தீர்ப்பு அதை முற்றிலும் சிதைப்பதாக உள்ளது” என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
‘இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்கள்’ – அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு
உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதையடுத்து அங்கு கள ஆய்வு மேற்கொண்டு மே 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மசூதிக்குள் படம்பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட விவகாரம் குறித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று(மே 2) விசாரித்தது. “அதில் மனுதாரர்கள் கேட்டபடி மசூதியின் உள்பகுதி, அடித்தளம் உட்பட அனைத்து இடங்களிலும் காணொளிப் பதிவு செய்ய வேண்டும். கள ஆய்வுப் பணி மே 17 ஆம் தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தொப்பி அணிந்து பாராளுமன்றம் செல்ல முடியும்போது ஹிஜாப் அணிந்து கல்லூரி செல்ல முடியாதா? – ஓவைசி கேள்வி
இந்நிலையில் அசாதுதீன் ஓவைசி, “பாபர் மசூதி இழப்பே போதும். இன்னொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராக இல்லை. இவ்விவகாரத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம், மசூதி குழு ஆகியவை உச்ச நீதிமன்றத்தை நாடும் என நான் நம்புகிறேன். உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி அரசு, வழிபாட்டுத் தளங்களைச் சர்ச்சைக்கு உள்ளாக்குவோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
Source : NDTV
பிரியாணி தடை திமுக ஆட்சியை முடக்கும் சதி | Sangathamizhan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.