Aran Sei

அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

ரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க விசாரணை அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்க வேண்டும்.தமிழக அரசியல் கட்சிகளும் இதே கருத்தை ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய-மாநில அரசுகளில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மதன் மோகன் பூஞ்சி தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில்  மாநில அரசுகளின் கருத்துக்களை ஒன்றிய அரசு கேட்டு வருகிறது.

தமிழ்நாடு: பாஜக அண்ணாமைலைக்கு பாடம் எடுத்த இந்தியத் தேர்தல் ஆணையம்

ஆளுநர்களே மாநிலங்களுக்கு தேவையில்லை எனவும் அல்லது ஆளுநர்கள் குற்றவியல், அரசியல் அமைப்பு மீறல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களை நீக்குவதற்கான விசாரணை அதிகாரம் மாநில சட்டமன்றப் பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மாநில ஆளுநரை நியமிப்பதற்கு முன்பு சம்மந்தப்பட்ட மாநில அரசை கலந்தாலோசித்து மாநில அரசின் பரிந்துரையின் பேரில் ஆளுநர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும், ஆளுநர்கள் தங்களது விருப்புரிமை அதிகாரங்களை அரசியல் கண்ணோட்டத்தோடு தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரச கோர வேண்டும்.

கேரளா: மாணவர் தலைவரான ஹிஜாப் அணிந்த எஸ்.எப்.ஐ., மாணவி

அமைச்சரவை மற்றும் சட்டமன்றத்தின் பரிந்துரைகளை உதாசீனப் படுத்தும் வகையில் சில மாநில ஆளுநர்கள் செயல்படுவதால் மேற்கண்ட பரிந்துரைகளை ஒன்றிய அரசிற்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.  தமிழக அரசியல் கட்சிகளும் இதே கருத்தை ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பை மீறும் ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் வேண்டும் – பேராசிரியர் ஜவாஹிருல்லா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்