Aran Sei

‘பிரதமர் திரும்பிப் போனதற்குப் பாதுகாப்பு குறைபாடு காரணமல்ல; விசாரணைக்குத் தயார்’ – பஞ்சாப் முதல்வர்

ஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழுவை  மாநில அரசு அமைத்துள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பெரோஸ்பூரில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டது. இதன் காரணமாக பேரணி உள்ளிட்ட எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளாமல் பிரதமர் மோடி கிளம்பியுள்ளார்.

இணையத்தில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: ஆர்எஸ்எஸ்தான் காரணம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

இப்பிரச்சினை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநில அரசை உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். .

பிரதமர் திரும்பிப் போன சம்பவத்திற்குப் பின்னால் எந்தவிதமான பாதுகாப்புக் குறைபாடோ அரசியல் நோக்கமோ இல்லை என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். ,மேலும், விசாரணைக்கு தனது அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

‘பிரதமர் திரும்பிப் போனதற்குப் பாதுகாப்பு குறைபாடு காரணமல்ல; விசாரணைக்குத் தயார்’ – பஞ்சாப் முதல்வர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்