Aran Sei

கியானவாபி மசூதி வழக்கு: அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிபதியால் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம்

வாரணாசியில் உள்ள கியானவாபி மசூதியில் காணொளி பதிவு செய்யப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி சிவில் நீதிமன்றதில் நிலுவையில் உள்ள வழக்கை அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதிமூலம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சீலிடப்பட்ட கவரில் காணொளிகுறித்த அறிக்கை வாரணாசி நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்ட சில மணிநேரங்களில் மசூதி காணொளி அறிக்கையின் விவரங்களை இந்து மனுதாரர்கள் வெளியிட்டனர். இதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. பத்திரிகைகளுக்கு “தேர்ந்தெடுக்கப்பட்ட விசியங்கள்” கசிவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

“தேர்ந்தெடுக்கப்பட்ட விசியங்கள் கசிவது நிறுத்தப்பட வேண்டும். அது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீதிமன்றம்தான் திறக்க வேண்டும்,” என்று நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

“சமூகங்களுக்கிடையில் சகோதரத்துவமும் அமைதியும் தேவை. இது நீதிமன்றத்திற்கு மிக முக்கியமானது” என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பொதுவெளியில்  சமநிலை மற்றும் அமைதி உணர்வு தேவை. நாட்டில் சமநிலை உணர்வைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பணியில் நாங்கள் இருக்கிறோம்” என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

“இந்த வழக்கு சிக்கலானது மட்டுமன்று  உணர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. விசாரணை நீதிபதிக்கு பதிலாக மாவட்ட நீதிபதி  இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால், அனுபவம் வாய்ந்தவர்கள் அதைக் கேட்டால் நல்லது” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Source: NDTV

கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar

கியானவாபி மசூதி வழக்கு: அனுபவம் வாய்ந்த மாவட்ட நீதிபதியால் விசாரிக்கப்படும் – உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்