Aran Sei

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம்: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புள்ளதாக கூறி சிங்கப்பூர் அரசு தடை

Credit: NDTV

ஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இந்துக்கள் வெளியேறுவதைக் கதைக்களமாகக் கொண்ட இந்தி திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை சிங்கப்பூர் அரசு தடை செய்துள்ளது.

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் ஒருதலைப்பட்சமாக சித்தரிக்கப் பட்டுள்ளதாகவும் பல்வேறு மத, இன சமூகங்கள் வாழும் சிங்கப்பூரில் பகைமையை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்பு உள்ளதால் இப்படத்தை தடை செய்வதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வழியே பிரிவினையைத் தூண்டும் பாஜக – மெகபூபா முப்தி விமர்சனம்

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 2022 மார்ச் 11 அன்று ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் வெளியானது. இத்திரைப்படத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல மாநில பாஜக முதலமைச்சர்கள் பாராட்டியிருந்தனர்.

ஆனால் இத்திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வை பரப்புவதாக பலரால் விமர்சிக்கப்பட்டது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூட்யூபில் வெளியிடுங்கள், வரிவிலக்கு எல்லாம் தரமுடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தியாவின் ஆளுங்கட்சியால் விளம்பரப்படுத்தப்பட்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Source : NDTV

Surya Siva திமுகவுக்கு உழைச்ச லட்சணத்த நா சொல்றேன் | Munna Ibrahim

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம்: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புள்ளதாக கூறி சிங்கப்பூர் அரசு தடை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்