Aran Sei

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் – சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் விமர்சனம்

கோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய-சர்வதேச திரைப்பட விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட திருவிழாவில் 79 நாடுகளிலிருந்து 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஆர்.ஆர்.ஆர்., ஜெய் பீம், தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற படங்கள் திரையிடப்பட்டன.

இந்நிலையில், இந்திய – சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய – சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வுக்குழு தலைவர் நடவ் லபிட் பேசினார்.

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம்: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புள்ளதாக கூறி சிங்கப்பூர் அரசு தடை

அதில், “15-வது திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ஆல் நாங்கள் அனைவரும் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம். இது பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. வாழ்க்கைக்கும், கலைக்கும் விமர்சனம் குறித்து ஆலோசிப்பது திருவிழாவின் ஆன்மா என்பதால் இந்த மேடையில் எனது உணர்வுகளை வெளிப்படையாக உங்களிடம் கூறுவதில் நான் முற்றிலும் வசதியாக உணருகிறேன்’ என்று நடவ் லபிட் கூறியுள்ளார்.

ஒன்றிய அரசின் அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் முக்கிய நடிகர்களான ஆஷா பரேக், அக்‌ஷய் குமார், ஆயுஷ்மான் குரானா மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட பலரின் முன்னிலையில் நடவ் லபிட் தனது கருத்துக்களை தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Source : indianexpress

Hindi Theriyadhu Poda I History of Hindi Imposition detailed Explanation I Maruthaiyan Interview

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் – சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்