முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 144 தடை உத்ரவு போடப்பட்டுள்ளது என்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 10 முதல் 15 ஆம் தேதிவரை உலுபெரியா, பஞ்ச்லா மற்றும் ஜகத்பல்லவ்பூர் பகுதிகளிலும், ரயில் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஊர்வலமாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும், ஆபத்தான ஆயுதம் ஏந்திச் செல்வது, பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில மாவட்டங்கள் முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. அது, ஜூன் 13 வரை தொடரும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹவுரா மாவட்டத்தில் நிலைமை அமைதியாக உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல் போராட்டங்கள் அல்லது வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பதற்றமான பகுதிகளில் நாங்கள் பெருமளவிலான காவல்துறையினரை நிறுத்தியுள்ளோம் என்று காவல் உயர் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்து நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
வன்முறை, போராட்டம், மக்களின் இயல்புவாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
”மாவட்டத்தில் குழப்பத்தை உண்டாக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம்., நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அமைதி நிலவுவதை உறுதிசெய்கிறோம். போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.” என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Source: Thenewindianexpress
Jaggi ஏதும் சிக்கிருச்சா? | Murugavel Interview | Sadhguru Jaggi Vasudev Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.