Aran Sei

சக எம்பிக்களை தீவிரவாதி என அழைத்த விவகாரம் – கனடாவின் ஆளும் லிப்ரல் கட்சியில் இருந்து எம்பி ரமேஷ் சங்கா வெளியேற்றம்.

கனடாவின் பிராம்ப்டன் சென்டர் தொகுதியிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் சங்கா, ஆளும் லிபரல் கட்சி உட்குழுவில் இருந்து வெளியேற்றி  இருப்பதாக, சிபிசி நியூஸை மேற்கோள் காட்டி ஸ்குரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்சியின் சக உறுப்பினர்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறியதாக வெளியேற்றப்பட்டு இருப்பதாகவும், இதனால் நாடாளுமன்ற இணையதளத்தில், சங்காவை சுயேட்சை உறுப்பினராகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” வெளிநாடுகளில் இந்தியச் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை ” – கெய்ர்ன் அச்சுறுத்தல்

சக எம்பிக்கள் மீது “மோசமான மற்றும் ஆதாரமற்ற” குற்றச்சாட்டைக் கூறி வரும் ரமேஷ் சங்கா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து கடந்த வாரம் தனது அலுவலகத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது எனக் கனடா அரசின் தலைமை கொறடா மார்க் ஹொலண்ட் தெரிவித்தகாக ஸ்குரால் கூறியுள்ளது.

”நாங்கள் மீண்டும், மீண்டும் தெளிவுபடுத்தி வருகிறோம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது கனேடியர்கள் மீது பயன்படுத்தப்படும் ஆதாரமற்ற மற்றும் மோசமான சொல்லாடல்களைப் பொறுத்து கொள்ள மாட்டோம்” என்றும் “இது போன்ற நிகழ்வுகளை எதிர்கொண்டதில்லை; இது எங்குக் கொண்டு செல்லும் என்று தங்களுக்கு தெரியும்” என ஹால்லண்ட் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஆலோசித்த, பிறகே சங்கா கட்சியின் உட்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக ஹால்லண்ட் தெரிவித்தாக, ஸ்குரால்  கூறியுள்ளது.

கடந்த வாரம் ஒய் மீடியா என்ற ஊடகத்திற்கு சங்கா அளித்த நேர்காணலில், சக எம்பி நவதீப் பைன்ஸ் மற்றும் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சாஜன் பற்றி விமர்சித்ததாக, டொரோன்டோசன் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி வன்முறைக்கு மத்திய அரசே பொறுப்பு – மம்தா பானர்ஜி, சரத் பவார் குற்றச்சாட்டு

அந்த நேர்காணலில் சங்கா, பைன்ஸ் மற்றும் சாஜினை காலிஸ்தானிய தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார் என்றும், தீவிரவாத எண்ணம் இருப்பவர்கள், அமைச்சர்களாகத் தகுதியானவர்களா, எனத் தனக்கு சந்தேகமிருக்கிறது எனத் தெரிவித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது தீவிரவாத எண்ணங்களால் பைன்ஸ் பதவி விலக வேண்டும் என்று, சங்கா கூறிவந்த நிலையில், குடும்ப பிரச்னை காரணமாகப் பைன்ஸ் பதவி விலகினார் என்றும், உட்கட்சி குழுவிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக,  இதுவரை சங்கா கருத்து தெரிவிக்கவில்லையென ஸ்குரால் கூறியுள்ளது.

சக எம்பிக்களை தீவிரவாதி என அழைத்த விவகாரம் – கனடாவின் ஆளும் லிப்ரல் கட்சியில் இருந்து எம்பி ரமேஷ் சங்கா வெளியேற்றம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்