சிறுபான்மையினருக்கு எதிரான நாடு என்ற பிம்பம், இந்தியத் தயாரிப்புகளுக்கான சந்தையை உலகளவில் இழக்க வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியத் தயாரிப்புகளுக்கான வர்த்தக இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி உலகளவில் இந்தியா நம்பகத்தன்மையற்ற நாடாக பார்க்கப்படும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவது, வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய இந்தியாவிற்கு நல்லதல்ல என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின்போது இந்துக்கள் – இஸ்லாமியர்களிடையே கலவரம் ஏற்பட்டது. வன்முறையைத் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி ஏராளமான இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை இடிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்குப் பிறகு ரகுராம் ராஜன் இவ்வாறு பேசியுள்ளார்.
ஜனநாயக அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே மாதிரியாக நடத்தினால் கட்டாயம் சர்வதேசச் சந்தையில் இந்தியா மீதும், இந்தியத் தயாரிப்புகள்மீது மதிப்பு அதிகரிக்கும். இதனால் தானாகவே இந்தியாவின் வர்த்தகம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
Source : NDTV
ஆட்டோ பயணத்தின் சுமை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.