பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு (EWS) கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான வருமான வரம்பை 8 லட்சமாக எதன் அடிப்படையில் ஒன்றிய அரசு நிர்ணயித்தது என்ற கேள்விகளை உச்சநீதிமன்றம் அண்மையில் எழுப்பியது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதி பட்டியலிட்டு உடனடியாக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 6 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் திட்டமிட்டிருந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரை அடையாளம் காணுவதற்கான வருமான உச்சவரம்பை 8 லட்சமாக நிர்ணயித்தது நியாமானதுதான் என்று அது சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அகிலேஷ் யாதவின் கனவில் தினமும் தோன்றும் கிருஷ்ணர் – உ.பி.யில் ராமராஜ்ஜியம் அமைக்கப்போவதாக உறுதி
அகில இந்திய இட ஒதுக்கீடு (AIQ) பிரிவின் கீழ் NEET மருத்துவ சேர்க்கைக்கு 2021 ஜூலை 29 ஆம் தேதி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான(OBC) 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு(EWS) 10% இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அறிவித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான(EWS) 10% ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய 2019 இன் 103 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், உச்சநீதிமன்றத்தின் ஒரு பெரிய அமர்வுக்கு முன் கேள்விக்கு உட்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான ஒரே அளவுகோலாகப் பொருளாதாரத்தை மாற்றும் இந்த சட்டத்திருத்தம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்று தி இந்து கூறியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினரை(EWS) நிர்ணயிப்பதற்கான பொருளாதார அளவுகோல்களை மறுபரிசீலனை செய்வதாக ஒன்றிய அரசு நவம்பர் 25 அன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனை மறுபரிசீலனை செய்வதற்கான குழு தனது அறிக்கையை டிசம்பர் 31 அன்று ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான பழைய தனிநபர் வருமான வரம்பான 8 இலட்சம் என்பதே சரியானது. இந்த 8 இலட்ச வருமான வரம்பை ஒரு குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமான வரம்பாகவும் சேர்க்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source : TheHindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.