பிரக்யாராஜில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர் ஜாவேத் முகமதுவின் வீட்டை இடிப்பதற்கு உத்தரபிரதேச அதிகாரிகள் என்ன நியாயத்தை மேற்கோள் காட்டினாலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
இந்த இடிப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியில் ஜாவேத் உறுப்பினராக உள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரான அவரது மகள் அஃப்ரீன் பாத்திமா கட்சியின் மாணவர் பிரிவு தேசிய செயலாளராக உள்ளார்.
ஜாவேத்தின் மனைவியின் பெயரில் உள்ள வீடு, பிரக்யாராஜ் மேம்பாட்டு ஆணையத்தால் நோட்டீஸ் வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் இடிக்கப்பட்டது.
முஹம்மது நபி தொடர்பாக பாஜக பிரமுகர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது ஜாவேத் ஜூன் 11 ஆம் தேதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர், வீடு இடிப்பதை தண்டனை வழங்கும் நடைமுறையாக இந்திய சட்டத்தின் கீழ் வழங்கப்படவில்லை. எனவே, இது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.
”என்ன நடக்கிறது என்பதை விவரிக்க ஒரு வார்த்தை உள்ளது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டத்தின் ஆட்சி வெறுமனே புறக்கணிக்கப்படவில்லை, அரசாங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் முழு விழிப்புணர்வுடன் அது மீறப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
”ஜாவேத் முகமது போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார், அவரால் ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும், சட்டத்தின் ஆட்சியின் கீழ், இது போன்ற ஒடுக்குமுறையை செய்ய முடியாது” என்று கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
அவர்மீது சந்தேகம் இருந்தால் வழக்கு பதியப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். அவர் குற்றவாளி என்று நிருபீக்கப்பட்டால் மட்டுமே தண்டனைகுறித்த கேள்வி எழும். எவ்வாறாயினும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, தண்டனைகளை இரண்டு விதமாக மட்டுமே வழங்க முடியும். ஒன்று சிறைத் தண்டனை, மற்றொன்று அபதாரம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குடும்பத்தினரின் வீட்டை இடிக்க சட்டத்தில் எந்த இடமும் இல்லை என்று கூறிய அவர், “இது போன்ற நடவடிக்கை (உத்தரபிரதேசத்தில்) தொடர்ந்தால், சட்டம் மற்றும் காவல்துறை தேவையில்லை. இது முற்றிலும் தன்னிச்சையானது.” என்று கூறியுள்ளார்.
சட்டவிரோத கட்டுமானம் என்ற பெயரில் இடிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், “எந்த ஒரு கட்டடத்தை இடிக்க வேண்டும் என்றாலும் முறையான நடைமுறைகளை பின்பற்றி தான் இடிக்க வேண்டும். முதலில் ஆக்கிரமிப்பு அடையாளம் காணப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட திட்டத்தைப் பின்பற்றாத கட்டுமானத்தைப் பற்றியதாக இருந்தால், அபராதம் செலுத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என்று உறுதிப்படுத்தப்பட்ட நகராட்சி சட்டங்கள் உள்ளன” என்று அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் தெரிவித்துள்ளார்.
Source: The Wire
ஷமூக ஆர்வலர்களுக்கு இன்னுமா பத்தல | Rajiv Gandhi Interview | Sumanth C Raman | Rangaraj Pandey
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.