Aran Sei

டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு

நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகக் புகார் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியின் காணொளியைப் பகிர்ந்துள்ளார், அதில்,  டெல்லி காவல்துறையால் ஜோதிமணி தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. பெண் போராட்டக்காரர்களை  இப்படி கையாள்வது இந்தியாவின் மாண்பை மீறுவதாகும். ஒரு மக்களவை உறுப்பினருக்கு இவ்வாறு நடப்பது மிக மோசமானது.நான் டெல்லி காவல்துறையின் நடத்தையைக் கண்டிக்கிறேன். சபாநாயகர்  ஓம்பிர்லா  இச்சம்பவம் குறித்து தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்” என்று சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ – ஜாவேத் முகமதுவின் மகள் சுமையா நேர்காணல்

சசி தரூர் பகிர்ந்துள்ள காணொளியில், டெல்லி காவல்துறையினர் அவரது  ஆடைகளைக் கிழித்து, மற்ற பெண் போராட்டக்காரர்களுடன் ஒரு குற்றவாளியைப் போல பேருந்தில் அழைத்துச் சென்றதாக கரூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக அரசு திமிர் பிடித்தது: காவல்துறையின் ஒடுக்குமுறை எங்களை தடுக்காது – கைது செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கருத்து

“டெல்லி காவல்துறையினர் நேற்று எங்களை கொடூரமாக தாக்கினர். அவர்கள் எனது ஆடைகளை கிழித்து, காலணிகளை கழற்றி, குற்றவாளி போல என்னை தூக்கி சென்றனர்,” என்று அவர் கூறியுள்ளார்.

காவல்துறையினர் அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“பேருந்தில் என்னையும் சேர்த்து ஏறத்தாழ 8 பெண்கள் இருக்கிறோம். நாங்கள் பலமுறை தண்ணீர் கேட்டும், அவர்கள் மறுத்துவிட்டார்கள். நாங்கள் அதை வெளியில் இருந்து வாங்க முயற்சிக்கும் போது, ​​எங்களுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று விற்பனையாளர்களிடம் கூறுகிறார்கள். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டும்” என்று ஜோதிமணி அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார்.

மதத்தின் பெயரால் துன்புறுத்தல் கூடாது – திரைக் கலைஞர் சாய் பல்லவி கருத்து

இது குறித்து மதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் ஒன்றிய அரசின் அணுகுமுறைகளை எதிர்த்துப் போராடிய சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.சிதம்பரம், ஜோதிமணி ஆகியோர் மீது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் டெல்லி காவல்துறை கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. வன்மையான கண்டனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: NDTV

‘அதானிக்கே கொடுங்க’ – கட்டாயப்படுத்திய மோடி | இலங்கையில் நடந்த களேபரம் | Modi

டெல்லி காவல்துறை என்னை கொடுரமாக துன்புறுத்தியது – ஜோதிமணி குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்