அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஜிகாத்தை போதித்தார். ஜிகாத் என்ற கருத்து இஸ்லாத்தில் மட்டுமல்ல, பகவத் கீதையிலும், கிறிஸ்துவ மதத்திலும் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மொஹ்சினா கித்வாயின் வாழ்க்கை வரலாறு புத்த வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய முன்னாள் மக்களவை சபாநாயகரும், ஒன்றிய அமைச்சர் சிவராஜ் பாட்டீல், “இஸ்லாம் மதத்தில் ஜிஹாத் பற்றி அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.இது குர்ஆனில் மட்டுமல்ல, மகாபாரதத்திலும், கீதையில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஜிஹாத் பற்றி பேசுகிறார், இந்த விஷயம் குரான் அல்லது கீதையில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் உள்ளது.
மொஹ்சினா கித்வாயின் புத்தகம் உங்கள் மதத்தைப் பின்பற்றும் அதே வேளையில் அனைத்து மதங்களையும் மதிப்பது பற்றி பேசுகிறது. உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Source : hindustantimes
இந்தி தெரியாது போடா…| இடியட் சங்கி சேஷாத்ரிக்கு வைச்ச ஆப்பு | Aransei Roast | Hindi | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.