Aran Sei

நபிகளை விமர்சித்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

பிகள் நாயகத்திற்கு எதிரான கருத்துக்களால் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

முஹம்மது நபி குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் புலம்பெயர்ந்த இந்துக்கள் உயிரை பாதுகாக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது – தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

பாஜகவின் சமூகவிரோதிகள் தேசத்தை வெறுப்பு நெருப்பில் தள்ளுவதாகவும், சர்வதேச அளவில் நாடு இழிவுபடுத்தப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

“பா.ஜ.க.வின் இத்தகைய சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பாஜகவின் தவறுகளுக்கு நாடு மன்னிப்பு கேட்காது, ஆனால் ஆளும் அரசின் கட்சித் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

“சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய கட்சியில் உள்ள சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எனும் நாடகம் போடுவதற்கு பதிலாக, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

பாஜக ஆட்சியில் நாடு ஓர் உள்நாட்டுப் போரை நோக்கிச் செல்கிறது – லாலு பிரசாத் யாதவ்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ” பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்காக தேசம் மன்னிப்பு கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க., தவறு செய்கிறது, அதன் பின்விளைவுகளை நாடு ஏன் சந்திக்க வேண்டும். இதை விட வெட்கக்கேடானது எதுவும் இருக்க முடியாது. இந்தியா மன்னிப்பு கேட்கக் கூடாது. இது நாட்டின் தவறு அல்ல, ஆனால் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கேரா கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்க வேண்டியது மோடி தான்; இந்தியா அல்ல – தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயல் தலைவர் கே.டி. ராமா ராவ்

 

காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தனது வஞ்சகம், ஆணவம், பெருமை ஆகியவற்றில் வெகுதூரம் சென்று, அதன் சொந்த இருளில் குருடாகி விட்டது. பாஜகவின் செயல்களுக்கான விளைவுகளை கட்சிதான் ஏற்க வேண்டும் நாடு அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அரங்கில் இந்தியா அவமதிக்கப்படுவது வெட்கக்கேடானது. இது நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Source: Thenewindianexpress

நாடகமாடும் பாஜக, நடிக்கும் அரேபிய நாடுகள் | Prophet Muhammad

நபிகளை விமர்சித்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்