பெட்ரோல் மீதான கலால் வரியை கடந்த 60 நாட்களில் ரூ.10 உயர்த்தி, இப்போது அதை ரூ.9.50 குறைப்பதாக கூறி மக்களை பாஜக ஏமாற்றுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்பதாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (மே 21) அறிவித்தார்.அதில் பெட்ரோல் மீதான வரி 9.50 ரூபாயும், டீசல் மீதான வரி 7 ரூபாயும் குறைக்கப்படும் என் அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “நிதியமைச்சர் அவர்களே கடந்த 60 நாட்களில் நீங்கள் பெட்ரோல் விலையை 10 ரூபாய் உயர்த்தியுள்ளீர்கள். ஆனால் இப்போது பெட்ரோல் விலையை 9.50 ரூபாய் குறைக்கிறோம் என்கிறீர்கள்.
அதேபோல் டீசலின் விலையை 10 ரூபாய் உயர்த்தியுள்ளீர்கள். அதே சமயம் டீசல் விலையை 7 ரூபாய் குறைக்கிறோம் என்கிறீர்கள். இப்படி புள்ளிவிவரங்களை கூறி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.
“இப்போதும் பெட்ரோல் மீதான கலால் வரி 19.90 ரூபாய் ஆகவும், டீசல் மீதான கலால் வரி 15.80 ரூபாய் ஆகவும் உள்ளது. ஆகவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை 2014 மே மாதத்திலிருந்தது போல பெட்ரோலுக்கு 9.48 ரூபாய் ஆகவும், டீசலுக்கு 3.56 ரூபாய் ஆகவும் திரும்பப் பெற வேண்டும். மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்” என்று ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Source : NDTV
ஜாதி பாக்காதீங்கனு சொல்றது தப்பா Gayathri Raghuram ? Jeeva Sagapthan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.