Aran Sei

மேற்கு வங்க சட்டமன்றம் முடக்கம்: ஆளுநரின் செயல் விதிமுறைகளுக்கும் மரபுகளுக்கும் எதிரானது – மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்த ஆளுநரின் செயல் என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர், அரசியலமைப்பின் 174 வது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலச் சட்டசபையைக் காலவரையின்றி ஒத்திவைப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க சபாநாயகர் ஆளுநரின் அனுமதி பெற்ற பிறகே இனி சட்டசபையைக் கூட்ட முடியும்.

இது குறித்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைத்த ஆளுநரின் செயல் என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.

மேலும், அரசிலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த ஆளுநர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு அடங்கியிருக்கிறது  என்று தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டமன்றம் முடக்கப்பட்டது குறித்துப் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்கத்தைப் போலத் தமிழகச் சட்டமன்றத்தையும் முடக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்,

 

மேற்கு வங்க சட்டமன்றம் முடக்கம்: ஆளுநரின் செயல் விதிமுறைகளுக்கும் மரபுகளுக்கும் எதிரானது – மு.க.ஸ்டாலின்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்