Aran Sei

தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்

ஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடிதிருத்தம் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளார். அதன் பிறகு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஈரோடு: பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியை இடைநீக்கம் – வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிக்க சாதியினர், பட்டியல் இன மக்கள் யாருக்கும் மளிகைக் கடைகளில் பொருள் வழங்கக் கூடாது, முடிதிருத்தம் செய்யக் கூடாது என கிராம கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறினர். மேலும், ஆதிதிராவிடர் தெருவுக்குக் குடிநீர் வராமல் தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில், ஆதி திராவிடர் சமுகத்தை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் கேட்கும் போது உங்களுக்குத் தரக் கூடாது என கிராமத்தில் தடை விதித்து இருப்பதாக மளிகை கடைக்கார் கூறும் காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகியது.

தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?, தலித் மக்களும் மனிதர்கள் தான். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது பெருமையா? – பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் கேள்வி

தஞ்சாவூரில் தொடரும் இத்தகைய தீண்டாமை பிரச்சினை தொடர்ந்து வரும் நிலையில், பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மாட்டேன் என்று கூறிய கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளான். அவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Ilaiyaraja background score | Vivek Agnihotri’s Kashmir Files | Ilaiyaraja | Modi| Dalit | Ambedkar

தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்