தமிழ்நாடு அரசு வழங்கும் தகைசால் தமிழர் விருதுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொண்டாற்றிய மூத்த தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பாக தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக விளங்கும் 96 வயதான நல்லகண்ணு, 1925-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நல்லகண்ணு, 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராக இருந்திருக்கிறார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மத்திய கமிட்டி உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்
நிர்மலா சீதாராமனின் பொய்களுக்கு PTR பதிலடி | Nirmala Sitharaman | Salem Dharanidharan | Aransei
https://www.youtube.com/watch?v=szhvZ22i9js
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.