தகைசால் தமிழர் விருதுக்காக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன் ரூ. 5ஆயிரம் சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வழங்கினார்.
தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் ‘தகைசால் தமிழர்’ விருது பெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதலமைச்சரால் வழங்கப்படும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறுமைப்படுத்துகிறது பாஜக – சோனியா காந்தி விமர்சனம்
கடந்த ஆண்டு இந்த விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது, அரசு வழங்கிய நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் விதமாக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு சங்கரய்யா வழங்கினார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. 75வது சுதந்திர தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விருதையும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் நல்லகண்ணுக்கு வழங்கினார். இதை தொடர்ந்து தமிழர் விருதுக்காக அரசு வழங்கிய 10 லட்சம் ரூபாய் நிதியுடன் ரூ. 5ஆயிரம் சேர்த்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை நல்லகண்ணு வழங்கினார்.
Its a preplanned attack on PTR – Pasumpon Pandian | Bjp Slipper on PTR | PTR vs Annamalai | Madurai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.