தமிழகத்தில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க கூடாதென்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில் கள் மற்றும் அதன் சொத்துகளின் முழு விபரங்களையும், வருமானத்துடன் அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுகிழமை (ஏப்ரல் 18) ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்கள் அனைத்தும், இன்று கொள்ளை கூடாரங்களாக மாற்றப்பட்டுள்ளன. அவை தடுக்கப்பட வேண்டும். கோவில் மற்றும் சொத்துகளிலிருந்து வரும் வருமானம் மக்களுக்குத்தான் சென்றடைய வேண்டும். கோவில்களை அனைத்து விதமான பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். நிலங்கள் மீட்கப்பட வேண்டும். இதுகுறித்து ழுமையான ஆய்வு செய்து அரசாங்கம் வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
“ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ், ஈஷாவால் மிரட்டப்படும் பெ.மணியரசன்
”இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகள் எப்படி பெரும் பணக்காரர் ஆகின்றனர். ஊழல் சாம்ராஜியமாக கோவில்கள் மாற்றப்பட்டுள்ளன. ஊழலின் தோற்றுவாய் கோவிலிலிருந்து தான் துவங்குகிறது. கோவில்களை முழுமையாக பாதுக்காக்க என்ன நடவடிக்கை தேவை என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.” என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
”இந்து அறநிலையதுறையில் என்னென்ன விஷயங்கள் நடந்துள்ளன என்பது குறித்து ஒரு மாத காலத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
”தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 36 ஆயிரத்து 850 கோவில்களுக்கு, 5.75 லட்சம் ஹெக்டேர் பரப்புள்ள நிலங்கள் மற்றும் 2.5 கோடி சதுரடி பரப்பு வணிக கட்டடங்கள் உள்ளன. இதில் செய்யப்பட்டு இருக்கும் அக்கிரமிப்புகள் காரணமாக ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் தான் வருமானம் வருவதாக கூறப்படுகிறது. கோவில் மற்றும் அதன் சொத்துக்களில் முறையாக வருமானம் வரப்பெற்றால், மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டை எவ்வித வரியுமின்றி போட முடியும்.” கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, கோவை பேரூர் கோவிலுக்கு, 2,500 ஏக்கர் நிலம் உள்ளது. இது யாரிடம் உள்ளது. என்ன வருமானம் வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. இதுபோல் அனைத்து கோவில்களின் அசையும், அசையா சொத்துக்களை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் – உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த தெய்வத்தமிழ்ப் பேரவை
”அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோவில்கள் மற்றும் அதன் சொத்துகளின் முழு விபரங்களையும், வருமானத்துடன் அரசு வெள்ளை அறிக்கையாக, ஒரு மாதத்துக்குள் வெளியிட வேண்டும். இல்லையெனில், நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். மக்களைத் திரட்டிப் போராட்டம் புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.” என மருத்துவர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.